/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.சி.க.,வினர் சட்டசபை நோக்கி ஊர்வலம்
/
வி.சி.க.,வினர் சட்டசபை நோக்கி ஊர்வலம்
ADDED : ஜன 28, 2025 06:25 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தாய்வழி சாதி சான்றிதழ் வழங்ககோரி வி.சி., கட்சியினர் சட்டசபை நோக்கி நேற்று ஊர்வலம் சென்றனர்.
புதுச்சேரியில்பாலின பாகுபாடு காட்டாமல், தாய்வழியில் ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
பட்டியலின மக்கள் அல்லாத சாதியினருக்கு 2001ம் ஆண்டை வரையறையாக வைத்துசாதி சான்றிதழ் வழங்குவதுபோல், குடிபெயர்ந்த பட்டியலின மக்களுக்கும், சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வி.சி.,கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
, இக்கோரிக்கையை வலியுறுத்தி வி.சி., சார்பில் சட்டசபை நோக்கி ஊர்வலம் நேற்று நடந்தது. சுதேசி மில் அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு, கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், செல்வநந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்ற ஊர்வலத்தை,ஜென்மராகினி கோவில் அருகே பெரியகடைபோலீசார் பேரிகார்டு அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர். இதையடுத்து, ஊர்வலமாக சென்ற கட்சியினர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

