/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் இயக்குநராக வீர் சிங் நேகி நியமனம்
/
ஜிப்மர் இயக்குநராக வீர் சிங் நேகி நியமனம்
ADDED : ஜன 25, 2025 05:05 AM

புதுச்சேரி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் இயக்குநராக வீர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிப்மர் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய டாக்டர் ராகேஷ் அகர்வால் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்து.
அதையடுத்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஜிப்மருக்கு நிரந்தர இயக்குநரை தேடி வந்தது. ஜிப்மரின் மூத்த பேராசிரியர் கவுதம் ராய் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூர் எய்ம்ஸ் செயல் இயக்குநர் வீர் சிங் நேகி புதுச்சேரி ஜிப்மர் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இயக்குநர் பணியை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய சுகாதார அமைச்சக சார்பு செயலர் ஷாம்பூ குமார் பிறப்பித்துள்ளார்.