/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினம் கோவிலில் நாளை தேரோட்டம்
/
வீராம்பட்டினம் கோவிலில் நாளை தேரோட்டம்
ADDED : ஆக 14, 2025 06:40 AM

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை (15ம் தேதி) நடப்பதையொட்டி தேரை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை (15ம் தேதி ) நடக்கிறது. பிரெஞ்சு காலத்தில் இருந்து மரபுப்படி கவர்னர் தேரோட்டத்தை துவக்கி வைப்பது வழக்கம். அதன்படி, நாளை நடக்கும் தேரோட்டத்தை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
விழாவையொட்டி, கோவில் முன் நிறுத்தியுள்ள தேரை தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். விழா பாதுகாப்பு தொடர்பாக, தெற்கு எஸ்.பி., பக்தவச்சலம், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் ஆகியோர் தேரோட்டம் நடக்கும் சாலை, கோவில் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.