தேர்தலையொட்டி வாகன சோதனை ரூ. 12 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
தேர்தலையொட்டி வாகன சோதனை ரூ. 12 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : செப் 16, 2026 02:46 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு, கலால்துறை தாசில்தார் தலைமையில் நடந்த வாகன சோதனையில் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடப்பதால், நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம், மதுபான உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாநில எல்லையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி கலால் துறை சார்பில் எல்லைப்பிள்ளைச்சாவடி, லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி - திண்டிவனம் சாலை ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நேற்று இரவு கலால் துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையில் அதிகாரிகள் மறைமலையடிகள் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக வந்த தேவதாஸ், 65, என்பவரில் பைக்கில் இருந்த 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவ்வழியாக சென்ற வாகனங்களில் மதுபானங்கள், பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
