தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜிவ் சிக்னல் பிரீ லெப்டில் பேரிகார்டு அமைப்பு

 ராஜிவ் சிக்னல் பிரீ லெப்டில் பேரிகார்டு அமைப்பு

 ராஜிவ் சிக்னல் பிரீ லெப்டில் பேரிகார்டு அமைப்பு


ADDED : செப் 16, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 02:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திண்டிவனம் - கோரிமேட்டில் இருந்து வரும் வாகனங்கள், புதுச்சேரி ராஜிவ்காந்தி சிக்னலில் பிரீ லெப்ட்வழியில் நிற்காமல் செல்லும் வகையில், போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்துள்ளனர்.

திண்டிவனம் - கோரிமேடு பகுதியில் இருந்து வரும் இரு சக்கரம் வாகனங்கள், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ராஜிவ் சிக்கனலில் பிரீ லெப்ட் வழியாக இ.சி.ஆர்., வழியாக செல்ல வேண்டும்.

ஆனால் கோரிமேட்டில் இருந்து வரும் வாகனங்கள், இருசக்கரம் வாகனத்தில் வருபவர்கள் பிரீ லெப்டில் நின்று சிக்னலில் ஒரு பகுதியில் உள்நுழைந்தும்,கொக்கு பார்க் சிக்கனல் வழியாக யூ டர்ன் எடுத்து வந்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் திண்டிவனம், கோரிமேடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பிரீ லெப்ட் வழியாக கொக்கு பார்க் சிக்னலை தாண்டி சிவாஜி சிலை நான்கு முனை சந்திப்பு வரை சென்று, மீண்டும் ராஜிவ் சிக்னலுக்கு வரும் வகையில் பேரிகார்டு அமைத்துள்ளனர்.

இதனால் இனி திண்டிவனம், கோரிமேடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பிரீ லெப்ட் வழியாக நிற்காமல் செல்லாலம்.ஆனால் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைப்பதற்கு பதில், நிரந்த சிமெண்ட் கட்டை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us