ADDED : ஆக 25, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒ.01 டி.எச் வரிசையில் உள்ள வாகன பேன்சி எண்கள் இணையதளத்தில் வரும் 1ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து ஆணையர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஏலத்தில் பங்கு பெறவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவு சொல் (பாஸ்வேர்டு) https://parivahan.gov.in/fancy என்ற இணையதளம் மூலம் வரும் 31ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்தவர்கள் தங்களுக்கு தேவையான எண்களை தேர்வு செய்து, அதற்குண்டான அடிப்படை தொகையை செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவர்கள் மட்டுமே வரும் 1ம் தேதி, காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.
ஏலத்தில் பங்கேற்பவர்கள், அதற்குண்டான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை https://transport.py.gov.in என்ற இணைய தள முகவரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக விபரங்கள் அறிய போக்குவரத்து துறை 0413 2280170 அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட எண் முன்பதிவு செய்யப்பட்ட வாகனம் அந்த எண்ணை முன்பதிவு செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பதிவு செய்ய தவறினால் அத்ததைய முன்பதிவு செயலிழந்துவிடும். மேலும், அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் அவரது உரிமையை இழந்து விடும்.
ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
