/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாகன பேன்சி எண்கள் ஏலம் அறிவிப்பு
/
வாகன பேன்சி எண்கள் ஏலம் அறிவிப்பு
ADDED : ஜன 24, 2024 04:27 AM
புதுச்சேரி : போக்குவரத்து துறையின் பி.ஓய்.05 ஆர் வரிசை பேன்சி எண்கள் பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி போக்குவரத்து துறையின், பி.ஒய்-05 ஆர் வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் இன்று 24ம் தேதி காலை 11:00 மணி முதல் வரும் 29ம் தேதி மாலை 4:30 மணி வரை ஏலத்திற்கு பங்கேற்க பதிவு செய்யலாம்.
இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு, தேவையான பெயர், பாஸ்வேர்டு https://parivahan.gov.in/fancy, என்ற இணையதளத்தில், 'நியூ பப்ளிக் யூசர்' கிளிக் செய்து பதிந்து இன்று முதல் வரும், 28 ம் தேதி பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு பதிவு செய்தவர்கள் வரும் 29ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம். இந்த இ-ஆக் ஷன் ஏலத்தில் பங்கு பெற விரும்பம் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை, https://transport.py.gov.in, என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப தொகையின் விவரம், ஈ.எம்.டி.,யின் விபரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் போக்குவரத்து துறை அலுவலக தொலைபேசி எண் 0413 - 2280170 மூலம் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏலம் சம்மந்தப்பட்ட பண பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ, காசோலையாக ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

