ADDED : செப் 12, 2026 11:53 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம், மதுபான உள்ளிட்டவைகளை கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாநில எல்லையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி கலால் துறை சார்பில், எல்லைப்பிள்ளைச்சாவடி, லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி –திண்டிவனம் சாலை ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நேற்று இரவு கலால் துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையில் அதிகாரிகள் இ.சி.ஆரில்., வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார்களை மடக்கி சோதனை செய்தனர். அதில் வாக்களர்களுக்கு மதுபானங்கள், பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
