தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகன சோதனை தீவிரம்

 வாகன சோதனை தீவிரம்

 வாகன சோதனை தீவிரம்


ADDED : செப் 14, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம், மதுபானம் உள்ளிட்டவைகளை கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மாநில எல்லையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி கலால் துறை சார்பில், எல்லைப்பிள்ளைச்சாவடி, லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி -திண்டிவனம் சாலை ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நேற்று முன்தினம் இரவு கலால் துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையில் அதிகாரிகள் இ.சி.ஆரில்., வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார்களை மடக்கி சோதனை செய்தனர். அதில் வாக்காளர்களுக்கு மதுபானங்கள், பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us