ADDED : செப் 14, 2026 05:21 PM
புதுச்சேரி: மேரி உழவர்கரை, தனியார் பார் அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மேரி உழவர்கரை, குண்டு சாலை தனியார் பார் அருகே நேற்று காலை அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தி காட்டி மிரட்டிவந்தார்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், மேரி உழவர்கரை, குண்டுச்சாலையை சேர்ந்த லட்சுமணன் மகன் அப்பு (எ) பிரபாகரன், 29; என்பதும், அவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
