ADDED : செப் 14, 2026 05:33 PM
புதுச்சேரி: கருவடிக்குப்பம், ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த், 45; கொத்தனார். இவருக்கும், குமரகுருபள்ளத்தை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. ஆனந்த் நேற்று முன்தினம் இ.சி.ஆர். மடுவுபேட் பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த போது, அங்கு பைக்கில் வந்த கவுதம், முன்விரோதம் காரணமாக ஆனந்தை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
பின், தனது நண்பரான மடுவுபேட்டை சேர்ந்த சச்சின் என்பவரை வரவழைத்து, இருவரும் சேர்ந்து ஆனந்தை உருட்டுக்கட்டை , அருகில் இருந்த மீன்கடையில் அருவாமனையை எடுத்து வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில், படுகாயமடைந்த ஆனந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனந்த் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் கவுதம், சச்சின் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.
