தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொது இடத்தில் ரகளை: 28 பேர் கைது

பொது இடத்தில் ரகளை: 28 பேர் கைது

பொது இடத்தில் ரகளை: 28 பேர் கைது


UPDATED : அக் 28, 2026 09:07 PM

ADDED : அக் 28, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 09:07 PM ADDED : அக் 28, 2026 08:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று (அக்.,27) இரவு இ.சி.ஆரில் ரோந்து சென்றனர். தனியார் பார் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்தியால்பேட்டை சக்திவேல்,39; செயின்ட்பால்பேட் பிரான்சிஸ்,55; ஜெயகொடி,57; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

டி.நகர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பல்வேறு இடங்களில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சண்முகாபுரம் ஐயனார், 23; மேட்டுப்பாளையம் பாபிசாேஹா,28; விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருள்,50; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

அதேபோல், டிரக் டெர்மினல் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வில்லியனுார் செந்தில்,30; பட்டானுார் முரளி,19; லாஸ்பேட்டை தேவா,20; கோரிமோடு அருள்பிரகாஷ்,22; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றபோது, தனியார் பார் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திலாஸ்பேட்டை சிவசங்கர்,52; இளஞ்செழியன்,52; சண்முகாபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் சண்முகாபுரம், ஜெய்கணேஷ்,47; வி.எம். கார்டன் பகுதியில் மூர்த்தி,33; தனியார் பார் அருகில் பிரபாகரன்,36; குண்டுசாலை சாராயக்கடை அருகில் மதிவாணன்,28; ஆகியோரை கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். மூலகுளம் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட பூமியான்பேட்டை ரவி, தக்ககுட்டடை பகுதியில், ஒபிதாஸ், 36; மூலகுளம் தனியார் பார் அருகில் பிச்சவீரன்பேட்டை கிருபாநந்தன்,40; மேரி உழவர்கரை பிரதாப்,28; மேரி உழவர்கரை தனியார் பார் அருகில் பூவரசன்,38; மூலகுளம் தனியார் பார் அருகே விக்னேஷ்,30; மூலகுளம் தனியார் பார் அருகில் மதியழகன்,24; தமிழரசன்,21; தக்ககுட்டை தனியார் பார் அருகில் வெங்கட்ராமன்,25; ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அருகில் தாமஸ்,27; ஆகியோர் மீது பொது இடத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காலாப்பட்டு போலீசார் கனகசெட்டிக்குளம் பகுதியில் மது போதையில் ஈடுபட்ட பெரியமுதலியார்சாவடி மணிவண்ணன்,33; என்பவரை கைது செய்தனர்.

ஒதியஞ்சஞ்சாலை போலீசார் புஸ்சி வீதி, காந்தி வீதி சந்திப்பில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட லாஸ்பேட்டை யுவராஜ்,25, என்பவரை கைது செய்தனர்.

மாகி போலீசார் மெயின்ரோடு, கல்லறை அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளம் குன்னுமக்கரா பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன்,63; என்பவரை கைது செய்தனர்.

பள்ளூர் போலீசார் பரல்-சோக்லி மெயின் ரோட்டில், குடிபோதையில் ஈடுபட்ட சபேஷ்,38 என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us