தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்னை புறப்பட்டார் துணை ஜனாதிபதி

சென்னை புறப்பட்டார் துணை ஜனாதிபதி

சென்னை புறப்பட்டார் துணை ஜனாதிபதி


ADDED : ஜூன் 18, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மூன்று நாள் அரசு பயணமாக வந்திருந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க மூன்று நாள் அரசு பயணமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் புதுச்சேரி வந்தார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் கடந்த 15ம் தேதி மதியம் 1 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வந்து இறங்கிய துணை ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் மாளிகையில் மூன்று நாட்கள் தங்கி கருத்தரங்கில் பங்கேற்றார்.

அதன் பின்னர் நேற்று மதியம் 1:00 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் இவர் வருகை புரிந்தபோதும் , நேற்று புறப்பட்டு செல்லும்போதும், ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வழக்கமாக மதியம் 12:30 மணி வந்து பெங்களூர் புறப்பட்டு செல்லும் இண்டிகோ விமான சேவையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் வழக்கம் போல் இயங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us