/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமியை நாய் கடித்து குதறும் வீடியோ வைரல்
/
சிறுமியை நாய் கடித்து குதறும் வீடியோ வைரல்
ADDED : செப் 13, 2025 06:58 AM
புதுச்சேரி : புதுச்சேரியில், சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்து குதறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி, எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள ஓட்டல் அருகே கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. வாகனங்களில் செல்வோர்களை, தெரு நாய்கள் விரட்டுவதால், பயத்தில் அதிவேகமாக சென்று, விபத்துகளில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.
இதுகுறித்து நகராட்சியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்கள், சாலையோரம் சென்ற சிறுமி உட்பட 4 பேரை விரட்டி, விரட்டி கடித்தது. அதில், காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே, எஸ்.வி.பட்டேல் சாலையில் நடந்து சென்ற சிறுமியை, தெருநாய் ஒன்று விரட்டி, கடித்து குதறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.