/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேற்றில் சிக்கிய கன்றை மீட்கும் வீடியோ வைரல்
/
சேற்றில் சிக்கிய கன்றை மீட்கும் வீடியோ வைரல்
ADDED : ஏப் 30, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இந்நிலையில், உழந்தை ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற, கன்று குட்டி ஒன்று நேற்று சேற்றில் சிக்கி கொண்டு, வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது.
அப்போது, சென்ற இரண்டு இளைஞர்கள், பிராணிகள் நல ஆர்வலர் அசோக் ராஜூக்கு தகவல் தெரிவித்து, அவரது உதவி யுடன், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், கன்று குட்டியை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.
பின், கன்று குட்டி மேய்ந்த மாட்டு மந்தையை நோக்கி ஓடியது. இந்த வீடியோ மூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

