/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணியிடம் நகை பறிக்கும் வீடியோ வைரல்
/
கர்ப்பிணியிடம் நகை பறிக்கும் வீடியோ வைரல்
ADDED : நவ 29, 2024 04:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பைக்கில் கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி, 45 அடி ரோட்டில் உள்ள காம ராஜர் நகர் தொகுதி, எம்.எல்.ஏ., அலுவலகம் எதிரே இரவு நேரத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.
அப்போது, கர்ப்பிணி பெண் கணவருடன் சாலையில் தடுமாறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தொடர்பாக பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

