/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
/
வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 17, 2025 03:46 AM

புதுச்சேரி: தேங்காய்த்திட்டு, வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி தொடர்ந்து 15 ஆண்டுகளாக நுாறு சதவீதம் தேர்ச்சி படைத்து வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி கிருத்திகா, 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். மாணவர்கள் ஹரிஷ், மோனிஷ் ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். மாணவிகள் ஜனுஷா, ஷாலினி ஆகியோர் 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
பள்ளியில், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் கிருத்திகா, ஜனுஷா, மோனிஷ் ஆகியோர் அறிவியல் பாடத்திலும், மாணவர்கள் கிருத்திகா, ஜனுஷா, மோனிஷ், லாவண்யா, நித்யஸ்ரீ, ராகவி, ஷாஹினா, கீர்த்தனன் பெர்னியர் ஆகியோர் சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
450 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு 50 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், சிறப்பு மதிப்பெண்கள் பெற்றவர்களையும், பள்ளி சேர்மன் ராஜசேகரன், பள்ளி முதல்வர் ரேகா ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
பள்ளி முதல்வர் கூறுகையில், பள்ளியின் இந்த வெற்றிக்கு வித்திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் நன்றி. மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கை யில் சலுகைகளை வழங்கப்படும்' என்றார்.