/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பை கிடங்கை மாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
/
குப்பை கிடங்கை மாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
குப்பை கிடங்கை மாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
குப்பை கிடங்கை மாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 27, 2024 06:23 AM

வில்லியனுார்: குருமாம்பேட் குப்பை கிடங்கை, வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குருமாம்பேட் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது.
இதனால், கிடங்கை சுற்றியுள்ள கோபாலன்கடை பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி வருகிறது. சமீபத்தில் பெய்த கன மழையில் குப்பை கிடங்கில் இருந்து கழிவுநீர் ஊருக்குள் புகுந்த தால் மக்கள் அவதிப்பட்டனர்.
குப்பை கிடங்கை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கலெக்டர் நேற்று காலை குப்பை கிடங்கை ஆய்வு செய்ய வருவதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்கள் காலை முதல் குப்பை கிடங்கிற்கு வந்து காத்திருந்தனர்.
கலெக்டர் வருவதற்கு தாமதமானதால், ஆத்திரமடைந்த மக்கள் குப்பை ஏற்றி வந்த வண்டிகளை தடுத்து நிறுத்தி, வழுதாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேட்டுப்பாளையம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமுக முடிவு ஏற்படாததால் மறியல் போராட்டம் நீடித்தது. குப்பை வண்டிகள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் சாய் சரவணன்குமார், கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் வருவாய்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குப்பை கிடங்கை மேட்டுப்பாளையம் பகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
குப்பை கிடங்கை மாற்றுவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். அதனை ஏற்று, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.