தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குண்டும் குழியுமான தார் சாலை கிராம மக்கள் கடும் அவதி

குண்டும் குழியுமான தார் சாலை கிராம மக்கள் கடும் அவதி

குண்டும் குழியுமான தார் சாலை கிராம மக்கள் கடும் அவதி


UPDATED : அக் 24, 2026 01:10 AM

ADDED : அக் 24, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:10 AM ADDED : அக் 24, 2026 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: குடியிருப்பு பாளையம் கிராமத்தில், குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையால், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட குடியிருப்பு பாளையம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புபாளையம், சுப்பையா நகர் சந்திப்பில் இருந்து ஆதிங்கப்பட்டு – பின்னாட்சிக்குப்பம் வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இதனால், இந்த சாலை தற்போது, ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி, கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இச்சாலையை, பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதியும் கடந்த ஆண்டே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சாலை மேம்பாட்டு பணி துவங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்போது, மழை காலம் துவங்கி உள்ள நிலையில், சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் மாறி உள்ளதால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோர் பள்ளத்தில் சிக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, பொது மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, குடியிருப்புபாளையம் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக புதுப்பித்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us