தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஏ.எப்.டி., பஞ்சாலை ஓய்வூதிய ஊழியர்கள் மனு

ஏ.எப்.டி., பஞ்சாலை ஓய்வூதிய ஊழியர்கள் மனு

ஏ.எப்.டி., பஞ்சாலை ஓய்வூதிய ஊழியர்கள் மனு


UPDATED : அக் 24, 2026 01:10 AM

ADDED : அக் 24, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:10 AM ADDED : அக் 24, 2026 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏ.எப்.டி. பஞ்சாலை ஓய்வூதிய ஊழியர்கள், நிலுவை ஊதிய தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி, ஏ.எப்.டி., பஞ்சாலையின் அனைத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர், தொழிலாளர் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சட்டசபையில் சந்தித்து, மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘கடந்த, 1990ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க வேண்டும்.

தானே புயலுக்கு பின் அரசு முன்வந்து அறிவித்த தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், இதுவரை வழங்கப்படாமல் உள்ள மீதமுள்ள நிலுவைத் தொகையையும் ஊதியத்துடன் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை சங்கத் தலைவர் சத்தியசீலன், செயலாளர் சின்னதுரை, பொருளாளர் ரவி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் வாழ்முனி, ஜெயபாலன் ஆகியோர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் வழங்கினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அடுத்தகட்டமாக முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us