/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வில்லியனுார், அரியாங்குப்பம் அணிகள் வெற்றி
/
ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வில்லியனுார், அரியாங்குப்பம் அணிகள் வெற்றி
ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வில்லியனுார், அரியாங்குப்பம் அணிகள் வெற்றி
ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வில்லியனுார், அரியாங்குப்பம் அணிகள் வெற்றி
ADDED : ஜன 16, 2025 06:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சூர் ஹேண்ட்பால் சங்கம் சார்பில், 15வது ஜூனியர் பிரிவு மாணவர், மாணவிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி 2024- -25 உப்பளம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இறுதிப் போட்டிகள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கணேசன், கதிர்வேல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அரியாங்குப்பம் மாவட்ட அணியை, வில்லியனுார் மாவட்ட அணி சந்தித்தது. இதில் 20க்கு 18 என்ற கோல் கணக்கில் வில்லியனுார் அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் அரியாங்குப்பம் அணியும், வில்லியனுார் அணியும் மோதின. இதில் 10க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் அரியாங்குப்பம் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஹேண்ட்பால் சங்க மாநில பொதுச் செயலாளர் நாராயணசாமி, சமூக சேவகர் பிரபாகரன், கணேசன் ஆகியோர் வழங்கினர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், சேகர், தியாகு கோரிதம், மணிகண்டன், மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி மாவட்ட சங்கத்தின் துணைத் தலைவர் ஆறுமுகம், ஐந்து மாவட்ட செயலாளர்கள் விஜயராஜா, மாறன், ழாம்பியர், கருணை பிரகாசம் ஆகியோர் செய்திருந்தனர். மாநில பொது செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

