/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார், ஏனாம் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி
/
வில்லியனுார், ஏனாம் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி
வில்லியனுார், ஏனாம் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி
வில்லியனுார், ஏனாம் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி
ADDED : ஜூலை 21, 2025 05:05 AM

வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பி.பி.எல்., பிரிமியர் லீக் கிரிக்கெட் 2 ஆவது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மதியம் நடந்த 25 வது லீக் போட்டியில் , ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் விளையாடிய வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மோகித் காலே 45, ஆகாஷ் போகுஜண்டே 30 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து, 153 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த அணியின் நெயன் காங்கேயன் 53 பந்துகளில் 80 ரன்கள், ஆனந்த் பயஸ் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நான்கு விக்கெட் எடுத்த ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் வீரர் அஸ்வின் தாஸ்ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்ற வில்லியனுார் மோகித், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் மற்றும் ஜெனித் ஏனாம் ராயல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
மாலை 6:00 மணியளவில் நடந்த போட்டியில் மாகி மெகலோ ஸ்டிரைக்கர்ஸ் - காரைக்கால் நைட்ஸ் அணிகள் மோதின.

