/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., இல்லாமல் தள்ளாடும் வில்லியனுார்
/
எஸ்.ஐ., இல்லாமல் தள்ளாடும் வில்லியனுார்
ADDED : மே 31, 2025 11:44 PM
புதுச்சேரி மாநிலத்திலேயே அதிக வழக்கு பதிவில் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் முதலிடம் உள்ளது. அந்த அளவிற்கு, குற்றங்கள் மற்றும் ரவுடியிசம் நிறைந்த பகுதி. ஏரியாவும் பெரியது.
சர்க்கிள் ஸ்டேஷனாக உள்ள வில்லியனுார் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் மங்கலம் மற்றும் கரிக்கலாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
வில்லியனுார் உள்ளிட்ட மூன்று ஸ்டேஷன்களுக்கும் தனித்தனியே எஸ்.ஐ.,க்கள் இருந்தனர். அதில், வில்லியனுார் எஸ்.ஐ., சரண்யா சில வாரங்களுக்கு முன் 'புட்செல்' பிரிவிற்கு மாற்றப் பட்டார். அதற்கு பதிலாக வேறு யாரையும் வில்லியனுாருக்கு நியமிக்கப்படவில்லை.
இதனால், நிலைய அதிகாரி இல்லாததால், அங்கு பணிபுரியும் போலீசார் பல்வேறு பிரச்னை களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையை மாற்றிட, ஸ்டேஷனுக்கு விரைவாக எஸ்.ஐ., நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.