ADDED : மே 24, 2026 06:05 AM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி ரவிக்குமார் எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வில்லியனுார் தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றே முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக்கொண்டார்.
நேற்று முன்தினம் மாலை முதல் வில்லியனுார் தொகுதி முழுதும் வீடு வீடாக சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முத்துப்பிள்ளைபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு கழுத்து முத்து மாரியம்மன் கோவிலில் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று இனிப்பு மற்றும் குக்கர் வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் என்.ஆர்., நிர்வாகிகள் முன்னாள் சேர்மன் பாலமுருகன், செந்தில், சத்தியமூர்த்தி, ராமதாஸ், ஆனந்தசங்கர், அன்பு, ரமேஷ், சரவணன், முரளிதரன், பன்னீர்செல்வம், இக்பால் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்ணபிரான், முகமது யூனுஸ், அன்புமதி, குமாரவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
