sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வில்லியனுார் லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை துவக்கம்

/

வில்லியனுார் லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை துவக்கம்

வில்லியனுார் லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை துவக்கம்

வில்லியனுார் லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை துவக்கம்


ADDED : ஏப் 25, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ஆலய பங்குத்தந்தை ஆல்பர்ட் கூறியதாவது;

வில்லியனுார், துாய லுார்து அன்னை ஆலயத்தின் 148வது ஆண்டு பெருவிழா, நாளை (26ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 5:30 மணிக்கு சென்னை, மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் திருப்பலி, மாலை கொடியேற்றம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு லுார்து அன்னைக்கு வைர கிரீடம் அணிவித்து தேர் பவனி நடக்கிறது.

வரும் 3ம் தேதி மாலை சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையிலும், 4ம் தேதி காலை 7:30 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு லுார்து அன்னைக்கு வைர கிரீடம் அணிவித்து ஆடம்பர தேர்பவனி நடக்கிறது' என்றார்.






      Dinamalar
      Follow us