/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் நடைபாதை வியாபாரிகள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு
/
வில்லியனுார் நடைபாதை வியாபாரிகள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு
வில்லியனுார் நடைபாதை வியாபாரிகள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு
வில்லியனுார் நடைபாதை வியாபாரிகள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு
ADDED : நவ 08, 2024 04:57 AM

வில்லியனுார்: வில்லியனுார் சாலையோர கடை வியாபாரிகள் எதிர்க்கட்சி தலைவரிடம் தற்காலிக கடைகள் வைப்பதற்கு அனுமதி பெற்று கொடுக்குமாறு கோரிக்கை மனு வழங்கினர்.
வில்லியனூர் நான்கு மாட வீதி சாலைகளில், கழிவுநீர் வாய்க்காலை தாண்டி ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகளின் கார் பார்க்கிங், ரேம்புகள், விளம்பர பதாகைகளும், சாலைகளை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் வைத்து வியாபாரம் செய்துவந்ததால், மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு பகுதி சப் கலெக்டர் தலைமையில் வில்லியனுார் மாட வீதிகள் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சாலையோரம் கடைகள் வைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
சிறு வியாபாரிகள் வாழ்வாதரம் பாதிக்காமல் இருக்க தென்கோபுர வீதியில் மாலை நேரங்களில் கடைகள் வைத்துக்கொள்ள அனுதிக்குமாறும், மார்க்கெட்டில் கட்டிவரும் புதிய கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சிறு வியாபாரிகள் 50க் கும் மேற்பட்டோர் சிவா எம்.எல்.ஏ.,வை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.