/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி

ADDED : செப் 22, 2025 02:39 AM

வில்லியனுார்: வில்லியனுார் பைபாஸ் அருகே உள்ள லாட்ஜில் சந்தேகப்படும்படியான ஒரு கும்பல் தங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று முதினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் லாட்ஜில் தங்கியிருந்த ஆறு பேர் கொண்ட கும்பலை பிடித்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்திருந்த மூன்று வீச்சரிவாள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், புதுச்சேரி, சாரம், தென்றல் நகர் குமார் மகன் வெங்கடேஷ், 23; வாணரப்பேட்டை, அம்மன் கோவில் வீதி, செல்வராஜ் மகன் சஞ்சீவி, 21; பள்ளிநெல்லியனுார், இந்திரா நகர், அருணகிரி மகன் ராகதேவன், 21; திருபுவனைப்பாளையம், பாரதிதாசன் நகர், முஜிபுர் ரஹ்மான் மகன் ரியாஸ் அகமது, 23; உழவர்கரை சாலை, அண்ணாதுரை மகன் அன்பரசன், 21; சாரம் முரளி மகன் சத்யமூர்த்தி, 22, ஆகியோர் என தெரியவந்தது.
இந்த ரவுடி கும்பல் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்கள், வில்லியனுார் பகுதியில் முக்கிய ரவுடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேஷ் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.