/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி
/
பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி
பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி
பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி வில்லியனுார் அணி வெற்றி
ADDED : ஜூலை 09, 2025 08:42 AM

வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் 2 ஆவது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும் 27 ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், நேற்று மதியம் நடந்த போட்டியில் ரூபி ஒயிட் டவுன் - வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழந்து 137 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அஸ்வின் தாஸ் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இவர், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.மோகித் கிங்ஸ் அணியில் புனித் தத்தே 3 விக்கெட்டுகளையும், சமர் கான் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.இரண்டாவது வெற்றியை மோகித் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. அணியில் ஆகாஷ் 34 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இவர்23பந்துகளில் 50 ரன்கள் எடுத்து, சாதனை படைத்துள்ளார். 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்தார். ஆகாஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் ராமதாஸ்ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார்.