/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் வாகன வேகம் காட்டும் 'டிஸ்பிளே'
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் வாகன வேகம் காட்டும் 'டிஸ்பிளே'
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் வாகன வேகம் காட்டும் 'டிஸ்பிளே'
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் வாகன வேகம் காட்டும் 'டிஸ்பிளே'
ADDED : ஜன 18, 2024 03:42 AM

புதுச்சேரி: விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலையில் வாகனங்களின் வேகத்தை துல்லியமாக தெரிவிக்கும் 'டிஸ்பிளே'க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி, ரூ. 6,431 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டிற்கு முன் துவங்கியது.
விழுப்புரம் ஜானகிபுரத்தில் துவங்கி எம்.என்.குப்பம்; மங்கலம் - கடலுார் சிப்காட்; காரைக்காடு - சிதம்பரம்; சீர்காழி சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் வரை என, நான்கு பிரிவாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இச்சாலையில் வாகனங்கள் 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தை மீறி செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிவேக வாகனத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில், ஒவ்வொரு 10 கி.மீ., துாரத்திற்கும், வாகனங்களின் வேகத்தை துல்லியமாக கணக்கிட்டு, வாகனம் கடந்து செல்வதற்கு முன்னதாக தெரிவிக்கும் 'டிஸ்பிளே'க்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் சாலையில் அரியூர், திருவண்டார்கோவில், கெங்கராம்பாளையம் உட்பட பல இடங்களில், வாகன வேகத்தை காட்டும் 'டிஸ்பிளே' பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கருவி, சாலையில் 500 மீட்டர் துாரத்திற்கு முன்னர் வரும்போதே வாகனத்தின் வேகத்தை துல்லியமாக கண்டறிந்து, பெரிய 'டிஸ்பிளே' மூலம் வெளிப்படுத்தும்.
நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்லக் கூடாது. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இக்கருவியை, அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.