தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகர் சதுர்த்தி பேரவை 21 அடி விநாயகர் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி பேரவை 21 அடி விநாயகர் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி பேரவை 21 அடி விநாயகர் பிரதிஷ்டை


ADDED : செப் 14, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 42ம் ஆண்டு விநயாகர் சதுர்த்தி விழா நேற்று துவங்கியது.

புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 42ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாரம் அவ்வை திடலில் 21 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விழா நேற்று மாலை 6:00 மணிக்கு மாக கணபதி ேஹாமம், சிறப்பு பூஜையுடன் துவங்கியது. புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி ஆசியுரை வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பூஜையை துவக்கி வைத்தார். விழா பேரவை செயலாளர் தணிகைவேல், துணைத் தலைவர்கள் ஸ்ரீதரன், சிவப்பிரகாசம், கேசவலு, கணேசன், பசுபதி, நாகமணி, பொருளாளர் செந்தில்முருகன், செயலாளர்கள் உத்திரவேல், சோழன் முன்னிலை வகித்தனர். மோகன்ராஜ், நாகராஜ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சிவக்கொழுந்து, முன்னாள் சபாநாயகர் செல்வம், மாரிமுத்து, அங்குதாஸ், செந்தில்குமரன், காளிமுத்து, இந்துமுன்னணி கோட்ட செயலாளர் முருகையன், பிரபாகரன், மதன்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கலைமாமணி கோபக்குமார் மற்றும் மாணவர்களின் மிருதங்க இசை நிகழ்ச்சி நடந்தது.நாகராஜன் நன்றி கூறினார். தொடர்ந்து வரும் 20ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us