/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை : புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை : புரிந்துணர்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை : புரிந்துணர்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை : புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 11, 2025 06:50 AM

பாகூர் : புதுச்சேரி விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும்,தைவான் நாட்டை சேர்ந்த கேன்சர்ஃப்ரீ பயோடெக் நிறுவனத்திற்கும் இடையே,புற்றுநோய் ஆராய்ச்சி தொடர்பானபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தைவான் நாட்டை சேர்ந்த கேன்சர்ஃப்ரீ பயோடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போ-ஹான் சென், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் லாங்-ஷெங் லு, வணிக மேம்பாட்டு இயக்குநர் மசாடோ யோகோயாமா ஆகியோர் அடங்கிய உயிரியல் தொழில்நுட்பக் குழுவினர், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் வேந்தர் டாக்டர் கணேசனை சந்தித்தனர்.
தொடர்ந்து அக்குழுவினர், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை அதிகாரி சுரேஷ் சாமுவேல், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி டீன் மணி, மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டியின் தலைமை இயக்க அதிகாரி மணிமாறன் ஆகியோருடன் விவாதித்தனர்.
அதில், புற்றுநோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவுதல், அடுத்த தலைமுறை வரிசைமுறை அடிப்படையிலான நோயறிதல் மற்றும் சிகிச்சைகள், துல்லியமான புற்றுநோயியல் திட்டங்களை செயல்படுத்துதல், கூட்டு மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துதல், நோயாளி பராமரிப்பில் கண்டுபிடிப்புகளை விரைவாக மொழிபெயர்க்க உதவுதல் உள்ளிட்ட சேவைகள் குறித்து தீர்மாணிக்கப்பட்டு,புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.

