/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிக்னல்களில் வி.ஐ.பி., கலாசாரம் வணிகர்கள் கடும் அதிருப்தி
/
சிக்னல்களில் வி.ஐ.பி., கலாசாரம் வணிகர்கள் கடும் அதிருப்தி
சிக்னல்களில் வி.ஐ.பி., கலாசாரம் வணிகர்கள் கடும் அதிருப்தி
சிக்னல்களில் வி.ஐ.பி., கலாசாரம் வணிகர்கள் கடும் அதிருப்தி
ADDED : அக் 26, 2024 05:58 AM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகை வணிகத்திற்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம், ஆனந்தா இன்னில் நடந்தது.
வர்த்தக சபை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க வணிகர்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.
கூட்டத்தில் வர்த்தக சபை துணைத்தலைவர் ரவி, குழு உறுப்பினர்கள் நமச்சிவாயம், குமார், எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுரேஷ்குமார் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை தினமும் அதிகப்பட்ச போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணி கணக்கில் நிற்க வேண்டியுள்ளது. வி.ஐ.பி.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சிக்னல் நிறுத்தப்படுகிறது. இதனால், 100 அடி சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அனைவரும் மிகவும் அவதிப்படுகிறோம் என சங்க நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர்.