ADDED : பிப் 03, 2024 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், நல்லொழுக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். போதை ஒழிப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பங்கேற்று, நல்லொழுக்கம் குறித்து கருத்துரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

