UPDATED : நவ 24, 2026 10:32 PM
ADDED : நவ 24, 2026 10:32 PM

புதுச்சேரி: திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்றாததை கண்டித்தும், தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கை கண்டித்தும் விசுவ ஹிந்து பரிஷத் புதுச்சேரி மாநிலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்திரா சதுக்கம் அருகே நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், வட தமிழக மாநில துணைத்தலைவர் திருஞான குருஜி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், வட தமிழக சேவை அமைப்பாளர் லட்சுமி நாராயணன், ரகுராம் மற்றும் புதுச்சேரி மாநில பஜ்ரங்தள் அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான இந்து ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில செயலாளர் நந்தகுமார் செய்திருந்தார். புதுச்சேரி மாநில பஜ்ரங் தள் இணை அமைப்பாளர் பாபுஜி நன்றி கூறினார்.
இதேபோல், திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்றாததை கண்டித்து முருக பக்தர்கள் இந்து முன்னணி பொறுப்பாளர்கள், ராஜா தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
