/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராமங்களில் விஸ்வகர்மா திட்டம்... விரிவாக்கம்; மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு
/
கிராமங்களில் விஸ்வகர்மா திட்டம்... விரிவாக்கம்; மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு
கிராமங்களில் விஸ்வகர்மா திட்டம்... விரிவாக்கம்; மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு
கிராமங்களில் விஸ்வகர்மா திட்டம்... விரிவாக்கம்; மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு
ADDED : மார் 14, 2024 05:31 AM
இந்தியாவில் உள்ள பராம்பரிய கிராமப்புற மற்றும் நகர்புற கைவினைஞர்கள்,கைவினை தொழிலாளர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில்,பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் கடந்தாண்டு செப்டம்பரில் பிரதமர் மோடியால் துவக்கிவைக்கப்பட்டது.
குறிப்பாக கொல்லர், பொற்கொல்லர், குயவர், தச்சர், சிற்பி உள்பட பாரம்பரிய கைவினைக் கலைஞர்களை உள்ளடக்கிய 18 விஸ்வகர்மா சமுதாயத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் கடந்தாண்டு நவம்பர்மாதம் முதல் அமலுக்கு வந்தது.இருப்பினும் நான்கு பிராந்தியங்களிலும் நகர பகுதியில் மட்டும் ஆரம்பித்து விண்ணப்பம் வரவேற்கப்பட்டன.
புதுச்சேரி 881,காரைக்கால் 208,ஏனாம் 2362,மாகி 14 என நான்கு பிராந்தியங்களில் இருந்து 3,465 விண்ணப்பங்கள் குவிந்தன.ஏனாமில் அதிக விண்ணப்பம் குவிந்துள்ள சூழ்நிலையில் அவற்றை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட தொழில் மையம் முடுக்கிவிட்டுள்ளது.நகர பகுதியில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம்,தற்போது கிராமங்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்படுவதாக மாவட்ட தொழில் மையம் அறிவித்துள்ளது.
இணைவது எப்படி
இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள் பொது சேவை மையத்தினை மூலம் முன் பதிவு செய்ய வேண்டும். வெற்றிக்கரமாக பதிவு செய்த பிறகு சரிபார்ப்பிக்கு பின் பயனாளிகளுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் அடையாள அட்டை வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் இ-வவுச்சர் மூலம் 15 ஆயிரம் ரூபாய் அடிப்படை பயிற்சி நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் உதவித் தொகையுடன்,5 முதல் 7 நாட்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
என்ன நன்மை
பயிற்சிக்கு பிறகு கைவினை கலைஞர்களுக்கு முதல் தவணையாக 1லட்சம் ரூபாய் வரை 5 சதவீத வட்டியுடன் வங்கிகள் மூலம் வழங்கப்படும்.இதனை தவணை முறையில் 18 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி முடித்தவர்களுக்கு இரண்டாம் தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.இத்தொகையினை 30 மாத தவணையில் திருப்பி செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி இலவசமாக பதிவேற்றம் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆகையால் பொதுமக்கள் எவரிடமும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விஸ்வகர்மா சமுதாயத்தினர் அளப்பரிய திறமை, படைப்பாற்றல் மற்றும் கைவினை நுட்பம் கொண்டவர்களாக இருந்த போதிலும்கூட அவர்களுக்கு நவீன பயிற்சியும் மூலவளங்களும் கிடைப்பது இல்லை. இந்தத் திட்டத்தின் வாயிலாக அந்த இடைவெளியை நிரப்பப்படுவதோடு, இன்றைய போட்டி உலகை எதிர்கொள்ளவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்தேகங்களுக்கு தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகம் அல்லது 0413-2248391 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மாவட்ட தொழில் மையம் கிராமப்பு கலைஞர்களுக்கு கைகொடுக்க அனைத்து பணிகளை வேகப்படுத்தி வருகின்றது.

