/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தர் 161வது பிறந்தநாள் விழா
/
விவேகானந்தர் 161வது பிறந்தநாள் விழா
ADDED : ஜன 17, 2024 12:19 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் 'விவேகானந்தரும் இளைஞர்களும்' என்ற முழக்கத்தோடு விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் மற்றும் இளைஞர்கள் எழுச்சி நாள் விழா மூலக்குளம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடந்தது.
விழாவில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். இந்து முன்னணி தமிழ்நாடு மாநில செயலாளர் மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி பாரதிய மஸ்துார் சங்க தலைவர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
விழாவில் வட தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, புதுச்சேரி ஆர்.எஸ்.எஸ்., கோட்ட அமைப்பாளர் மஞ்சுநாத், தமிழ்நாடு பா.ஜ., ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு சிறப்புரையாற்றினர்
நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் லட்சுமி நாராயணன் நினைவு பரிசுகள் வழங்கினார். இந்து முன்னணி உழவர்கரை நகர செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

