/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளி 40ம் ஆண்டு மாணிக்க விழா
/
விவேகானந்தா பள்ளி 40ம் ஆண்டு மாணிக்க விழா
ADDED : பிப் 08, 2026 04:19 AM

புதுச்சேரி: செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேனிலை பள்ளியின் 40 ஆண்டுகள் நிறைவையொட்டி, மாணிக்க விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற உறுதுணையாக பணிபுரிந்த அனைத்து சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி, கவுரப்படுத்தினார்.
பள்ளி முதன்மை முதல்வர் பத்மா விவேகானந்தா கல்வி குழுமத்தின் 40 ஆண்டு கால பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசினார். பள்ளி முதல்வர் கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் விவேகானந்தா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விவேகானந்தா கல்வி குழு மத்தின் விவேகானந்தா மேனிலை பள்ளி, செல்லப்பெருமாள் பேட்டை, அய்யங்குட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, விவேகானந்தா கல்வியியல் கல்லுாரி, விவேகானந்தா செவிலியர் கல்லுாரியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விவேகானந்தா கல்விக் குழுமத்தின் உறுப்பினர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

