/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா மேனிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
/
விவேகானந்தா மேனிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
விவேகானந்தா மேனிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
விவேகானந்தா மேனிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 09, 2025 12:16 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா மேனிலைப் பள்ளி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 214 மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாணவி தமயந்தி 600-க்கு 590 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மாணவன் கவுதம் 588 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடமும், மாணவி தர்ஷினி 581 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும், 500க்கு மேல் 91 மாணவர்களும், 450க்கு மேல் 71 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 18 மாணவர்களும், கணினி பயன்பாடு பாடத்தில் 3 மாணவர்களும், கணக்கு பதிவியலில் ஒரு மாணவரும், பொருளாதாரத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி, பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டினர்.