ADDED : ஜன 14, 2026 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தாமேல்நிலை பள்ளியில் விவேகானந்தர் 163 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தரின் சிலைக்கு செல்வகணபதி எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், விவேகானந்தா கல்லுாரி மாணர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாணவர்களுக்கு விவேகானந்தர் புத்தகம் வழங்கப்பட்டது.

