/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வ.உ.சி., அன்னை தெரேசா சிலைகளுக்கு மரியாதை
/
வ.உ.சி., அன்னை தெரேசா சிலைகளுக்கு மரியாதை
ADDED : செப் 06, 2025 03:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதிய நீதிக்கட்சி சார்பில் வ.உ.சி., உருவச்சிலைக்கு, மாநில அமைப்பாளர் தேவநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், துளுவ வேளாளர் சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்.
அன்னை தெரேசா நினைவு நாள்
புதுச்சேரி அரசு சார்பில், அன்னை தெரேசா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.