/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 5ம் தேதி தொழிற்பயிற்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 5ம் தேதி தொழிற்பயிற்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 5ம் தேதி தொழிற்பயிற்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 5ம் தேதி தொழிற்பயிற்சி
ADDED : பிப் 03, 2024 07:36 AM
புதுச்சேரி : மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி வரும் 5ம் தேதி நடக்கிறது.
மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், பல விதமான தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சாம்பிராணி தயாரிக்கும் பயிற்சி மற்றும் மூலிகை இட்லி பொடி தயாரிக்கும் பயிற்சியில், ஆவாரம் பூ இட்லி பொடி, வல்லாரை கீரை இட்லி பொடி, வாதநாராயணன் கீரை இட்லி பொடி போன்ற இயற்கை முறையில் தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி, நாளை மறுநாள், 5ம் தேதி காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 9600879709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

