/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா
/
கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா
ADDED : பிப் 13, 2024 04:46 AM

புதுச்சேரி: திருபுவனை தமிழன் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
இதில், விழுப்புரம் ஜாலி பிரண்ட்ஸ் அணி முதலிடமும், முத்திரையர்பாளையம் அணி 2ம் இடமும், தமிழன் விளையாட்டு கழகம் 3ம் இடமும் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, தமிழன் விளையாட்டுக் கழகச் செயலாளர் கருணாகரன் வரவேற்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் பன்னீர்செல்வம், மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
தமிழன் விளையாட்டுக் கழக தலைவர் தியாகராஜன், ஆசிரியர் பாலகுமார் ஆகியோர் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசினை வருண், பார்த்தசாரதி வழங்கினர். சதீஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளையராஜா, வசந்த், மோகன்ராஜ், நரசிங்கவரதன், ரங்கராஜ், செங்குட்டுவன், கார்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.