/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைப்பந்து போட்டி: பரிசு வழங்கல்
/
கைப்பந்து போட்டி: பரிசு வழங்கல்
ADDED : மார் 05, 2026 05:00 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் நடந்த கைப்பந்து போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில், பிரண்ட்ஸ் சார்பில், கைப்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியில், பங்கேற்ற மண்ணாடிப்பட்டு எம்.பிரதர்ஸ் அணி முதலிடத்தை பெற்றனர். அரியாங்குப்பம் பாண்டியன் பிரதர்ஸ் அணி இரண்டாமிடத்தையும், ஆர்.கே., நகர் பிரண்ட்ஸ் அணி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் ராஜா, வார்டு செயலாளர் பாலு, விஜயலட்சுமி, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

