/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் படிவம் திரும்ப பெறும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
/
வாக்காளர் படிவம் திரும்ப பெறும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
வாக்காளர் படிவம் திரும்ப பெறும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
வாக்காளர் படிவம் திரும்ப பெறும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : நவ 15, 2025 06:05 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெறும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. அதில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று வழங்கிய வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட மூலகுளம் பகுதிகளில் ஓட்டுச்சாவடி அலுவலரின் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்காளரிடமிருந்து பெறப்படும் படிவங்களில் அவர்கள் தரும் தகவல்களை சரியாக நிரப்பப்பட்டு உள்ளனவா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும் எனவும், திருத்தம் இருந்தால் அவர்கள் ஒப்புதலுடன் தாங்கள் அதை பூர்த்தி செய்து கவனமுடன் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை சிறப்பாக செய்து முடிக்க ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

