/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 120 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கம்
/
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 120 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கம்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 120 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கம்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 120 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கம்
ADDED : ஜன 17, 2026 05:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டத்தில் புதிதாக 120 ஓட்டு சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 798 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 28.10.25 முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளை சீரமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வீடாக வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டு ஒரு ஓட்டுச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் புதிய ஓட்டுச்சாவடி அமைக்கவும், பழுதடைந்த கட்டடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களால் பெயர் மாற்றப்பட்ட பள்ளிகள், அலுவலகங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளின் பெயர்களை மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு ஓட்டுச்சாவடிகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு எந்த ஒரு வாக்காளரும் ஓட்டு போட தனது இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ., மேல் பயணிக்காதபடியும், இயற்கை தடுப்புகளை கடந்து செல்லாதவாறு சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வீட்டில் வசிக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒரே சட்டசபை தொகுதியின், ஒரே பகுதி மற்றும் ஒரே பாகத்தில் இருக்குமாறு சீரமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் 120 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. 32 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 381 ஓட்டச்சாவடிகளில் உள்ள பகுதிகள் மறுசீரமைப்பு மற்றும் 111 ஓட்டுச்சாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி விபரம், புதுச்சேரி கலெக்டர் அலுவலக இணையதள முகவரியில் hrrps://puducherry-dt.gov.in/event/election-press-release/ உள்ள ''Rationalisation of Poling Station - 2025'' என்ற இணைப்பில் (link) பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 25 சட்டசபை தொகுதிகளில் ஏற்கனவே 798 ஓட்டுச்சாவடிகள் இருந்தது. தற்போது மறுசீரமைப்பில் புதிதாக 120 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 918 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

