தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வவுச்சர் ஊழியர்கள் சட்டசபை முற்றுகை

 வவுச்சர் ஊழியர்கள் சட்டசபை முற்றுகை

 வவுச்சர் ஊழியர்கள் சட்டசபை முற்றுகை


ADDED : பிப் 03, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொதுப்பணித் துறையில் பணியாற்றி வரும் வவுச்சர் ஊழியர்களில் 10 ஆண்டு பணி முடித்தவர்கள் நிரந்தரம் செய்வதாக சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.

அதனை வலியுறுத்தியும், காலி பணியிடங்களில் வவுச்சர் ஊழியர்களை நியமத்து பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வவுச்சர் ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று சட்டசபையை முற்றுகையிட நேற்று காலை, அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் அரசு மருத்துவமனை அருகே திரண்டனர்.

அவர்களை போலீசார் பேரிகார்டு வைத்து தடுத்து, இங்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை. மாதா கோவில் அருகே செல்லுமாறு கூறினர்.

அதனை ஏற்க மறுத்ததால், போலீசாருக்கும், வவுச்சர் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்குழுவினர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், சட்டசபைக்கு முதல்வர் வந்ததை தொடர்ந்து, போராட்டக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் முதல்வரை சந்திக்க அனுமதி தருவதாக கூறினர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us