/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதில் சுவர் அமைக்கும் பணி: சிவா எம்.எல்.ஏ., ஆய்வு
/
மதில் சுவர் அமைக்கும் பணி: சிவா எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஏப் 07, 2025 06:11 AM

வில்லியனுார்; சுல்தான்பேட்டை, புதுநகர் பகுதிக்கு செல்லும் சாலையை துண்டித்து ரயில்வே துறையினர் மதில் சுவர் அமைக்கும் பகுதியை சிவா எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுல்தான்பேட்டை, புதுநகர், புதுத் தெருவில் 50 வருடங்களுக்கும் மேலாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் சாலையை ரயில்வே துறைக்கு சொந்தம் என்று கூறி அளவீடு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்த சிவா எம்.எல்.ஏ., அப்பகுதி மக்களுடன் சென்று ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் ஐந்து அடி அளவிற்கு சாலையை விட்டு விட்டு மதில் சுவர் அமைக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார். மேலும் தென்னக ரயில்வே திருச்சி மண்டல மேலாளர், புதுச்சேரி ரயில்வே மேலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை துண்டித்திருப்பதும், அவரசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுத்தி உள்ளதும் கண்டிக்கத்தக்கது.
மக்களுக்கு இடையூறு இல்லாமல் ரயில்வே நிர்வாகம் மதில் சுவர் அமைக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து மக்களுக்கு பாதிப்பில்லாமல் மதில் சுவர் அமைப்பதாக உறுதியளித்தனர்.