ADDED : மே 22, 2026 02:48 AM

புதுச்சேரி: புதுச்சேரி வக்பு வாரியத்தின் முதல் கலந்தாய்வு கூட்டம் வக்பு வாரியம் அலுவலகத்தில் நடந்தது.
வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். வக்பு வாரிய உறுப்பினர்கள் நாஜிம் எம்.எல்.ஏ., டாக்டர் வித்தியா ராம்குமார், முஹம்மது ஜாகிர் ஹூசைன், சையத் அஹமத் மொஹிதீன், ஜமிலா பீ (எ) நஜிமா பீ மற்றும் வக்பு வாரிய அதிகாரி முகம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பலதர சமுதய மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருந்த வக்பு வாரியம் 11 ஆண்டுக்கு பிறகு அமைக்கப்பட்டதற்கு புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுநலம் சார்ந்த காரியங்கள், வக்பு மேம்பாட்டு சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வக்பு வாரியத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை உயர்தப்படும். நீட், ஜே.இ.இ., கல்வி படிப்பிற்காக இவ்வாரியத்தின் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வக்பு வாரியத்தின் காலியாக உள்ள இடத்தில் கல்வி நிறுவனம், மருத்துவமனைகள் போன்ற மக்களுக்கு பயன்படும் வகையில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
