ADDED : செப் 23, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, செப். 24–
தட்டாஞ்சாவடி தொகுதியில் வார்டு வாரியாக பிரச்னைகளை பட்டியலிட்டு கம்யூ., வேட்பாளர் சலீம் ஓட்டு சேகரித்தார்.
அவர், நேற்று குண்டுபாளையம், வள்ளலார் வீதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர், கவுண்டம்பாளையம் வார்டு பிரச்னைகளை சரிசெய்வோம். இப்பகுதியில் குடிநீர் சரியில்லை, மின்சார சரியாக வருவதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண மின்சார கம்பம் அமைக்க மனு அளித்துள்ளோம். நாங்கள் வந்த பிறகு இந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என, உறுதி அளிக்கிறேன்’ என்றார்.
