/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் கட்டண வசூல் மையங்கள் தற்காலிகமாக இயங்காது
/
குடிநீர் கட்டண வசூல் மையங்கள் தற்காலிகமாக இயங்காது
குடிநீர் கட்டண வசூல் மையங்கள் தற்காலிகமாக இயங்காது
குடிநீர் கட்டண வசூல் மையங்கள் தற்காலிகமாக இயங்காது
ADDED : ஏப் 29, 2025 04:23 AM
புதுச்சேரி: நவீன கணினி மயமாக்கல் காரணமாக குடிநீர் கட்டணங்கள் வசூல் மையம் தற்காலிக இயங்காது என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரக் கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை, பொது சுகாதாரக் கோட்டத்தின் மூலம் குடிநீர் பெறும் பொதுமக்களின் விவரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை வசூலிப்பது போன்ற பணிகள் நவீன கணினி மயமாக்கப்படவுள்ளது.
இதனால், வரும் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை பொது சுகாதாரக் கோட்டத்தின் கீழ் இயங்கும் கட்டண வசூல் மையங்கள் தற்காலிகமாக இயங்காது.
வரும் 7 ம் தேதி முதல் புதுச்சேரி பொது சுகாதாரக் கோட்ட அலுவலகம், லாஸ்பேட்டை உதவி பொறியாளர் அலுவலகம், மடுவுபேட் இளநிலை பொறியாளர் அலுவலகம், முத்திரையர்பாளையம் இளநிலை பொறியாளர், வில்லியனுார் இளநிலை பொறியாளர் அலுவலகம், அரியாங்குப்பம் இளநிலை பொறியாளர் அலுவலகம் கட்டண வசூல் மையங்கள் செயல்படும்.  மேலும், நவீன கணினி மயமாக்கப்பட்ட கட்டண வசூல் மையங்கள் கிராமப்புறங்களில் விரைவில் செயல்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

